The Inner Restart The Inner Restart

The Inner Restart

Mastering Thought, Mind, and Midlife Clarity

    • $1.99
    • $1.99

Publisher Description

இந்தப் புத்தகம் நேர்மறையான சிந்தனை அல்லது குருட்டு நம்பிக்கை பற்றியது அல்ல. இது மனசுதந்திரம் பற்றியது. ஒரு எண்ணமாக மாறாமல் அதைப் பார்க்கும் திறன், எதிர்வினையாற்றுவதற்கு முன் நிப்பாட்டும் தைரியம், வாழ்க்கை நிச்சயமற்றதாக இருக்கும்போதும் மையத்தில் நிலைத்திருக்கும் ஞானம் (wisdom) ஆகியவை பற்றியது.
எண்ணங்கள் எப்படி உருவாகின்றன, ஏன் மீண்டும் மீண்டும் திரும்ப வருகின்றன, அவை நம்மை எப்படி பிரச்சனையில் சிக்கவைக்கின்றன, வெளிப்புற வாழ்க்கை சரிவதற்கு முன்பாக உள் அமைப்பை எப்படி மீட்டெடுப்பது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கை கடினமாக இருப்பதால்தான் பெரும்பாலான மக்கள் தோல்வியடைவதில்லை. அவர்கள் தோல்வியடைவதற்குக் காரணம், அவர்களது மனம் ஒரே மாதிரியான எண்ணங்களை மீண்டும் மீண்டும் செய்வதை நிறுத்திக்கொள்ளாததுதான்.
ஒரு சம்பவம் ஒருமுறைதான் நடக்கும். ஆனால் மனம் அதை நூற்றுக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் நமக்கு படம் காட்டி கொண்டே இருக்கும். சிலமுறை வாழ்நாள் முழுவதும். அவற்றால் ஒரு பயம் நமக்குள்ளே வளர்ந்துகொண்டே போகும்.
வாழ்க்கை நம்மை ஒருமுறை காயப்படுத்தும். ஆனால் நமது சிந்தனைகள் ஒவ்வொரு நாளும் நம்மை காயப்படுத்திக்கொண்டே இருக்கும்.
நாம் யதார்த்தத்தால் பாதிக்கப்படுவதில்லை. நம் மனம் யதார்த்தத்தைச் சுற்றி உருவாக்கும் கதைகளால்தான் பாதிக்கப்படுகிறோம்.
அனுபவத்திலிருந்து இந்தப் புத்தகம் உருவானது. ஒரு எளிய உண்மையை உங்களுக்கு நினைவூட்டுவதற்காகவே எழுதப்பட்டது. மனம் ஒரு கருவி மட்டுமே, எஜமானன் அல்ல. எண்ணங்கள் வெறும் நினைவுகள் மட்டுமே, நிரந்தரங்கள் அல்ல. துன்பம் நமக்கு நாமே கொள்ளும் ஆயுள் தண்டனையாக இருக்க கூடாது.
சிந்தனைக்கும் நினைவுகளும் இடையிலான வேறுபாடு எவ்வாறு இருக்கும், ஆண்களும் பெண்களும் மனரீதியான சுழற்சிகளை வெவ்வேறு விதமாக எப்படி கையாள்கிறார்கள், கவனிக்கப்படாத ஒரு எண்ணம் எப்படி அமைதி, பணம், உறவுகள், ஆரோக்கியம் ஆகியவற்றை அழித்துவிட முடியும் என்பதையும் இதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை தேவையில்லை. உங்கள் மனதுடன் தொடர்பு கொள்ள ஒரு புதிய வழிதான் தேவை. அது தெரிந்தால், மலை போன்ற விஷயங்களை அசால்ட்டாக டீல் செய்யலாம்.
இது வேகமாகப் படிக்கும் புத்தகம் அல்ல. இது ஒரு கண்ணாடி போல அமர்ந்து, சிந்தித்து, உங்களைப் பார்த்து பார்த்து, உங்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய புத்தகம்.
மெதுவாகப் படியுங்கள். ஒரு வரி உண்மையாகத் தோன்றினால் இடைநிறுத்துங்கள். படிக்கும்போது உங்கள் சொந்த எண்ணங்களைக் கவனியுங்கள்.
உண்மையான மாற்றம் பக்கங்களில் இல்லை. படிக்கும்போது உங்களுக்குள் நடப்பதில்தான் உள்ளது.

GENRE
Health, Mind & Body
RELEASED
2026
February 15
LANGUAGE
TA
Tamil
LENGTH
37
Pages
PUBLISHER
Ananda
SELLER
Ananda Prakash
SIZE
28
MB
The Mermaid Tale The Mermaid Tale
2016
The Education of Innocence The Education of Innocence
2012
The Book of Dog Magic The Book of Dog Magic
2016
Et si le tantra changeait le monde ? - De l'intime au politique Et si le tantra changeait le monde ? - De l'intime au politique
2024
擁抱你的聲音入睡 擁抱你的聲音入睡
2022
相遇的理由 相遇的理由
2021