Garuda Puranam Garuda Puranam

Garuda Puranam

    • 49,00 Kč
    • 49,00 Kč

Publisher Description

ஸ்ரீகருடாழ்வார், பெரியதிருவடி, பக்ஷிராஜர், மஹாவிஷ்ணுவின் வாகனம் என்றெல்லாம் பெருமைக்குரியவர் ஸ்ரீ கருடன். “ஸுபர்ணோ வாயு வாஹன” என்ற ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகம் மூலம் மஹாவிஷ்ணுவுக்கு இணையாக ஸ்ரீ கருடன் பெருமை பெற்றிருப்பதை அறிய முடியும். ஒரு சமயம் நைமிசாரண்யம் எனும் சிறப்புமிக்க வனத்தில் தவம் மேற்கொண்டிருந்த ரிஷிகள் வேத வியாசரின் சீடரான சூதர் என்ற மகரிஷியிடம் பல ஐயங்களை எழுப்பினார்கள். “உலகில் ஜீவராசிகளுக்கு எதனால் ஜனன, மரணங்கள் ஏற்படுகின்றன? சிலர் தீராத வியாதியால் அவதிப்படுவது ஏன்? உடலை விட்டு பிரிந்த உயிர் எதனால் சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைகிறது? சிலர் ஆவியாய் அலைவது ஏன்? மோட்சம் கிடைக்க வழி என்ன?”- என்ற ஐயங்களுக்கெல்லாம் பதில் கூறியருளுமாறு அவரிடம் வேண்டிக் கொண்டனர். சூதமாமுனிவர் தமது குருவாகிய வேதவியாசரையும் பகவான் மஹாவிஷ்ணுவையும் தியானித்து வணங்கிய பின்னர் “சனகாதியரே! நீங்கள் கேட்ட கேள்விகளை முன்பொருமுறை ஸ்ரீகருட பகவான் ஸ்ரீமந்நாராயணரிடம் கேட்டார். அதற்கு மஹாவிஷ்ணு அளித்த விளக்கங்களை அப்படியே சொல்கிறேன்” என்று அந்த புண்ணிய புராண வரலாற்றை கூறினார். ஸ்ரீகருடனுக்கு திருமால் அளித்த அந்த விளக்கங்கள் ‘கருடபுராணம்’ என அழைக்கப்படுகிறது.
வியாசமகரிஷி தொகுத்தருளிய பதினெண் புராணங்களில் ஒன்றான கருடபுராணம் மேன்மையானது. திருமதி. பொன்னம்மாள் அவர்கள் மக்கள் அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் ‘கருடபுராணம்’ என்னும் இந்நூலை அழகு தமிழில் உரைநடை வடிவில் படைத்துத் தந்திருக்கிறார்.
கருட புராணத்தை அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிறப்பு, கிரஹணம், ச்ராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத்தடைகளை அகற்றி ஜெயமளிக்கும். நல்வாழ்வு மலரும். கருட புராணத்தை வேதோத்தமர்களுக்கு தானம் செய்வதால் பித்ருக்களின் வாழ்த்துக் கிடைக்கின்றது. அனைவரும் ‘கருடபுராணம்’ என்னும் இந்நூலைப் படித்து ஸ்ரீ கருட பகவானின் அளவற்ற கருணையால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறுமாறு பிரார்த்திக்கிறோம்.

GENRE
Religion & Spirituality
RELEASED
2020
24 December
LANGUAGE
TA
Tamil
LENGTH
72
Pages
PUBLISHER
Giri Trading Agency Private Limited
SIZE
9.9
MB

More Books by R Ponnammal

Shri Siradi Saibabavin Satya Charitram Shri Siradi Saibabavin Satya Charitram
2023
ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்ரீ ராகவேந்திரர்
2022
தெய்வத்தின் குரலமுதம் தெய்வத்தின் குரலமுதம்
2022
தெய்வத்தின் குரலமுதம் (பகுதி-2) காமாக்ஷி மந்திர விளக்கம் தெய்வத்தின் குரலமுதம் (பகுதி-2) காமாக்ஷி மந்திர விளக்கம்
2022
நாலடியார்: திருக்குறள் நன்னெறிக் கதைகள் - 100 நாலடியார்: திருக்குறள் நன்னெறிக் கதைகள் - 100
2021
பன்னிரு ஜோதிர்லிங்கங்ள் பன்னிரு ஜோதிர்லிங்கங்ள்
2021