திருக்குமரனடியார்கள் திருக்குமரனடியார்கள்

திருக்குமரனடியார்கள‪்‬

    • 15,00 kr
    • 15,00 kr

Udgiverens beskrivelse

‘மாசில்லாத அடியவர்கள் வாழ்கின்ற இடத்திற்கு தேடிச் சென்று அங்கு வாழ்பவன் முருகன்’ என்பதற்கேற்ப அருணகிரிக்கு, ‘முத்தைத்தரு....’ என்று அடி எடுத்துக் கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததும், கச்சியப்பருக்கு, ‘திகடச்சக்கர....’ என்று அடி எடுத்துக் கொடுத்து கந்த புராணம் பாட வைத்ததும், ‘கோழியை பாடும் வாயால் குஞ்சை பாட மாட்டேன்’, அதாவது சிவனை பாடிய வாயால் அவரது குமாரனை பாட மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த பொய்யாமொழி நாயனாரிடமிருந்து பாடலைப் பெற விரும்பி திருவிளையாடல் புரிந்து, அவரை தமது அடியாராக்கிக் கொண்டதும், தனது அத்யந்த பக்தனான முசுகுந்த சக்ரவர்த்திக்கு தனது நவவீரர்களை அனுப்பியதும் என முருகனின் அருட்திறம் இப்புத்தகம் முழுவதும் விரவியிருக்கிறது.
பெரிய புராணத்தில் சுந்தரர் எவ்வாறு பாட்டுடைத் தலைவனாக சித்தரிக்கப்பட்டாரோ அவ்வாறே சேய்த்தொண்டர் புராணத்தில் அருணகிரிநாதர் பாட்டுடைத் தலைவனாக கொள்ளப்பட்டு, அவர் பிறந்தது, முருகன் அவரை ஆட்கொண்டது, தலம் தலமாக சென்று அவர் திருப்புகழ் பாடிய விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

GENRE
Religion og åndelighed
UDGIVET
2020
24. december
SPROG
TA
Tamil
SIDEANTAL
99
Sider
UDGIVER
Giri Trading Agency Private Limited
STØRRELSE
4
MB