ஸ்ரீமத்பகவத் கீதை - யதார்த்த கீதை ஸ்ரீமத்பகவத் கீதை - யதார்த்த கீதை

ஸ்ரீமத்பகவத் கீதை - யதார்த்த கீத‪ை‬

Utgivarens beskrivning

யதார்த்த கீதை – கீதையின்  உண்மைக் கண்ணோட்டம்


ஸ்ரீமத்பகவத் கீதை – மனிதகுலத்திற்கான  தர்மசாஸ்திரம்


கி.மு.5200 ஆண்டுகளுக்கு முந்தைய பகவத் கீதையின் ஆதாரப்பூர்வமான மற்றும் நிரந்தரத் தெளிவுரை.


*********


கீதையை உபதேசிக்கும்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உள்ளகிடக்கை மற்றும்  உணர்ச்சிகள் என்னவாக இருந்தன?   அவரது ஆழ்மன உணர்ச்சிகளை நம்மால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.  சிலவற்றை வார்த்தைகளாலும் மேலும் சிலவற்றை உடல் மொழிகளாலும் வெளிப்படுத்த இயலும்.  மீதம் உள்ளவற்றை எவரேனும் உணர முற்பட்டால் அவர்கள் தங்கள் தங்கள் சொந்த அனுபவங்கள் மூலமே பெறமுடியும்.  கீதையின் தாத்பரியத்தை உணர வேண்டும் என்றால் ஒன்று அவர்கள்,  பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உன்னத நிலையை அடைந்தவர்களாய் இருத்தல் வேண்டும் அல்லது  பண்பு நலன்கள் மிகுந்த ஒரு ஆசிரியராக இருத்தல் வேண்டும். சுவாமிஜி,  கீதையின் சுலோகங்களை வெறுமனே திரும்பத் திரும்ப சொல்லாமல் உண்மையில் கீதையின் தத்துவத்தை அனைவரும் உணரச் செய்திருக்கிறார்.  இது எப்படி சாத்தியமென்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதை உபதேசித்த போது என்ன மனநிலையில் இருந்தாரோ அந்த நிலையை சுவாமிஜி அடைந்து விட்டார்.  எனவேதான், அவரால் கீதையின் உண்மையான  தத்துவத்தை தானும் உணர்ந்து நமக்கும் வழி காட்ட முடிகிறது.  நம்முடைய ஆழ்மன உணர்வுகளைத் தூண்டி, நம்மை ஞானமார்க்கத்திற்கு அழைத்துச் செல்ல சுவாமிஜியால் முடிகிறது.  


“வணக்கத்திற்குரிய ஸ்ரீபரமஹன்ஸ்ஜி மஹராஜ் ஒரு ஞான குருவாக தனது யதார்த்த கீதை நூலில், சொற்பொழிவுகள் மற்றும் அருளுரைகள் மூலம் கீதை குறித்த ஆழ்நிலை உணர்வுகளைத் தூண்டியிருக்கிறார்.” - சுவாமி அட்கடாநந்தா.


யதார்த்த கீதையின் ஆசிரியர் ஓர் அருட்தொண்டர் உலகக் கல்வி கற்றவர் அல்லர், இருப்பினும் குருவின் அருள் ஆசியினால் ஆன்ம அறிவு நிரம்பப் பெற்றவர்,  இது நீண்ட கால தியானப் பயிற்சியின் நற்பயனாகும்.  ஞானத்தை அறிந்து கொள்ளும் பயணத்தில் எழுதுவது கூட ஒரு தடை என கருதுபவர்.  இருப்பினும் அவருடைய வழிமுறைகள் இந்த சாகித்தியம் உருவாகக் காரணமாயிற்று.   மெய்ஞானம் உணரப்பெற்றதும் யதார்த்த கீதை எழுத வேண்டும் என்ற ஓர் ஆசை தவிர உள்ளத்தில் படிந்திருந்த உணர்வுகள் ஆசைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று.  முதலில் இந்த ஆசையைக் கூட தியானத்தின் மூலம் களைந்துவிடத்தான் எண்ணினார்.  ஆனால் ஆண்டவன் சித்தம் வலுவாக இருந்தது.  யதார்த்த கீதை பிறந்த கதை இது தான்.  இந்த சாகித்தியத்தில் தவறுகள் நேர்ந்தபோது எல்லாம் முழுமுதற் காரணனே திருத்தித் தந்தருளியுள்ளார்.


சுவாமிஜி அவர்களுடைய குறிக்கோள் “மனதுக்குள், அமைதியை ஒரு முகப்படுத்த வேண்டும்” அதன் வழி ’முடிவில் ஒவ்வொருவருக்கும் அமைதி’ என்ற கருத்து பரவ வேண்டும் என்னும் விருப்பத்தோடு இந்த நூலை வெளியிடுகிறோம்.


அனைத்து சங்கராச்சாரியார்கள், மடாதிபதிகள், பிராமண மஹா சபையின் உறுப்பினர்கள் மற்றும் 44 நாடுகளைச் சேர்ந்த ஆன்மீக அறிஞர்கள் கலந்து கொண்ட இந்த “நூற்றாண்டின்  கடைசி கும்பமேளா,” ஹரித்துவாரில் நடைபெற்றது.  அவ்வமயம், உலக மத அமைப்பு (World Religious Parliament), சுவாஜிக்கு “விஷ்வ கௌரவ்” (Pride of the World ) என்ற விருதை அளித்துக் கௌரவித்தது.  


10.04.1998 அன்று  நடைபெற்ற இந்த நூற்றாண்டின்  கடைசி கும்பமேளாவில், மனித இனத்திற்கான வேத நூலான

ஸ்ரீமத் பகவத் கீதையின் உண்மையான பகுப்பாய்வாக சுவாமிஜி எழுதிய “யதார்த்த கீதை” என்ற இந்த நூலுக்கு, பாரத் கௌரவ் (Pride of India ) என்ற விருதை அளித்து கௌரவிக்கப் பட்டார்.

26.01.2001 அன்று காசியில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் சுவாமிஜி ஸ்ரீஅட்கடாநந்தாவிற்கு அவரது யதார்த்த கீதை என்ற நூலுக்கும், சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டியும் உலக மத அமைப்பு “விஷ்வகுரு” (மனித குல குரு மற்றும் தீர்க்கதரிசி) என்ற விருதினை அளித்துக் கௌரவித்தது.


30.08.2007 அன்று ஷ்யாமல் ரஞ்சன் முகர்ஜி vs நிர்மல் ரஞ்சன் முகர்ஜி  மற்றும் பலர் தொடர்ந்த W.P.No.56447  of 2003 என்ற வழக்கில் மேன்மைமிகு அலகபாத் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. S.N.ஸ்ரீவத்ஸவா 30.08.2007 அன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ்கண்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.


“ஸ்ரீமத் பகவத் கீதை ஹிந்துக்களுக்கு மட்டுமான புனித நூல் அல்ல.  அது ஒட்டுமொத்த மனித குலத்திற்குச் சொந்தமானது.  கீதையில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொல்லப்படவில்லை.  அவை அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.”

சுவாமி அட்கடாநந்தா மகராஜ் ஒரு சிறந்த இந்தியத் துறவி.  அவர் எழுதிய “யதார்த்த கீதை,” இன, நிற வேறுபாடின்றி எல்லா மதத்தினருக்கும்  எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான  அறம் மற்றும் அறநூலாகும்.


“யதார்த்த கீதை” என்ற இந்தப் புத்தகம் ஒலி வடிவமாக உலக மொழிகள் (ஆங்கிலம், ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், சைனீஸ், இத்தாலியன், நார்வேயன், டச்சு போர்த்துகீசு, அரபி, ஜப்பானீஸ், பெர்ஷியன், நேபாளி மற்றும் உருது) மற்றும் இந்திய மொழிகளிலும் (இந்தி, பெங்காலி, அசாமீஸ், குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஒரியா, சிந்து. சம்ஸ்கிருதம், பஞ்சாபி) கிடைக்கும்.  மேலும், விபரங்களுக்கு http://yatharthgeetha.com/ என்ற வெப்சைட்டை அனுகவும்.


- ஸ்ரீபரமஹன்ஸ் சுவாமி அட்கடாநந்தா ஆஷ்ரம் டிரஸ்ட்

GENRE
Religion och andlighet
UTGIVEN
1997
1 januari
SPRÅK
TA
Tamil
LÄNGD
528
Sidor
UTGIVARE
Shri Paramhans Swami Adgadanandji Ashram Trust
STORLEK
3,2
MB

Fler böcker av Swami Adgadanand

श्रीमद्भगवद्गीता - यथार्थ गीता - मानव धर्मशास्त्र श्रीमद्भगवद्गीता - यथार्थ गीता - मानव धर्मशास्त्र
1983
యథార్థగీత - శ్రీమత్ భగవద్గీత యథార్థగీత - శ్రీమత్ భగవద్గీత
2001
Yatharth Geeta - Deutsch Yatharth Geeta - Deutsch
1997
Yatharth Geeta – Norwegian Yatharth Geeta – Norwegian
2006
Yatharth Geeta – Italian Yatharth Geeta – Italian
2003
Yatharth Geeta - Dutch Yatharth Geeta - Dutch
2006