கால்குலஸ் (நுண்கணிதம்) - ஒரு ஆழ்ந்த நுண்ணிய பார்வை
An infinite Love with Calculus
-
- $3.99
-
- $3.99
Publisher Description
பள்ளிக்கூடத்தில் முதலில் கரும்பாய் இனித்துக் கொண்டிருந்த கணிதத்தைப் பாகற்காய் போல் கசப்பாய் மாற்றியது எது என்று கேட்டால் நம்மில் பல பேர் கால்குலஸை தான் சொல்வோம். அதுவும் குறிப்பாக engineering கல்லூரி மாணவர்களுக்கு M1, M2, M3 என்று சொல்லப்படும் கணிதப்பாடத்தைப் பற்றி பேசினாலே அவ்வளவுதான் டென்சன் ஆகிவிடுவார்கள். இந்த differentiation -ம் integration -ம் வாழ்க்கையில் எங்கே பயன்படும் எதற்கு இந்தப் பாடத்தைப் படிக்கணும் என்று நம்மில் பலர் புலம்பியிருப்போம். மதிப்பெண் கண்ணோட்டத்தில் படித்ததால் நாம் இழந்த, சுவைத்து ரசிக்க மறந்த பாடத்தில் ஒன்றுதான் இந்த கால்குலஸ். சர் ஐசக் நியூட்டன் பயன்படுத்திய அதி அற்புத கருவிகளில் ஒன்றான இந்த கால்குலஸ் பல்வேறு துறைகளில் வியத்தகு பயன்பாடுளைக் கொண்டுள்ளது. இந்த கால்குலஸிற்கு பின்னால் உள்ள அடிப்படை கொள்கைகளைப் பற்றி பல்வேறு புத்தகங்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் செம்மொழியான தமிழ் மொழியில் வரவில்லை. இப்புத்தகம் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் பயின்ற மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் bilingual book எனப்படும் இரு மொழி புத்தகமாக எழுதப்பட்டுள்ளது. தற்பொழுது கல்லூரி படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் யாவரும் இப்புத்தகத்தில் உள்ள கால்குலஸ் பற்றிய அடிப்படை கொள்கைகளை படித்து தத்தமது பட்டப்பாடங்களில் வரும் கணிதப்பாடங்களை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். வழக்கம் போல எழுதப்படும் பாட நூல்களைப் போல் அல்லாமல் வாசகர்களுடன் கால்குலஸைப் பற்றி ஒரு உரையாடல் நிகழ்த்துவது போல் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. உள்ளே சென்று கால்குலஸை கொஞ்சம் ரசித்து விட்டு வாருங்க்கள்.